கேரளா சிக்கன் வறுவல்
கேரளா சிக்கன் வறுவல்
தேவையான பொருள்கள்
சிக்கன் - அரை கிலோசோம்பு - 1 ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 7 பூண்டு - 10 பல்கறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுதேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்
செய்முறை
முதலில் சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி வைத்து கொள்ளவும்
பின்பு மிக்ஸியில் காய்நத மிளகாய், சோம்பு , பூண்டு, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
கழுவி வைத்துள்ள சிக்கனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
தண்ணீர் முற்றிலும் வற்றி சிக்கன் நன்கு வெந்தவுடன் இறக்கவும். கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் ரெடி