பின்லேடனை உள்ளே நுழைந்து யு.எஸ். தூக்கின மாதிரி நாங்களும் வெச்சு செய்வோம்..... அருண் ஜேட்லி #indiapakistanwar
பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்து பின்லேடனை கொலை செய்தது போல எதுவும் நடக்கலாம் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே உச்சகட்ட போர் பதற்றம் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீரில் 2 போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின என்கிறது விமானப் படை.
ஆனால் பாகிஸ்தானோ தாங்களே இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என்கிறது. இருநாடுகளிடையே போர் உருவாகும் சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பாகிஸ்தான் போர் போன்ற நிலையை ஏற்படுத்தியிருப்பதால் எதுவும் எப்போதும் நடக்கலாம்,
பின்லேடன் விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்ததோ அதைத்தான் இந்தியா மேற்கொண்டிருக்கிறது என்றார்.