குழந்தைகளுக்குப் பிடித்த பிரெட் சில்லி ரெசிபி

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பிரெட் சில்லி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்: பிரட் ஸ்லைஸ் - 6எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்கடுகுசீரகம்இஞ்சி - சின்ன துண்டு பூண்டு - 5 பல் பச்சை மிளகாய் - 4காய்ந்த மிளகாய் - 4கருவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப வெங்காயம் - 2மஞ்சள் தூள் - கால் கரம் மசாலா - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - தேவையான அளவு தக்காளி - 2குடை மிளகாய் - 1கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை : முதலில், ப்ரெட்க்ளை தவாவில் போட்டு டோஸ்ட் செய்த பிறகு சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், நறுக்கிய இஞ்சி - பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும். அத்துடன், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர், மஞ்சள் தூள். கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து வதங்கியதும் தக்காளி, குடைமிளகாய் சேர்த்து கிளறி வேகவிடவும்.

மசாலா கலவையும், என்னையும் தனியாக பிரியும்போது, டோஸ்ட் செய்து வைத்துள்ள பிரெட் துண்டுகளை சேர்த்து கிளறி இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.அவ்ளோதாங்க.. சுவையான பிரெட் சில்லி ரெடி..!

More News >>