6 தொகுதிகளுக்கு செலவில்லை! ஏசிஎஸ், பாரிவேந்தரால் உற்சாகத்தில் எடப்பாடி

அதிமுக கூட்டணிக்குள் வந்துள்ள பாமக, பாஜக கட்சிகளைவிட சிறிய கட்சிகளால் நிம்மதியான மனநிலையில் இருக்கிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிடப் போகும் 7 தொகுதிகளுக்கான செலவுகளையும் அதிமுக பார்த்துக் கொள்ள இருக்கிறது. தொகுதிக்கு 35 கோடி என்ற வகையில் செலவிடத் திட்டமிட்டுள்ளது அதிமுக. அதேசமயம், பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கான செலவுகள் குறித்து அதிமுக தரப்பில் எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை. இவர்கள் இருவரைத் தவிர, புதிய நீதிக்கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளும் அதிமுக அணிக்குள் வர இருக்கின்றன.

வேலூர் தொகுதியை ஏ.சி.சண்முகத்துக்கு வழங்க இருக்கின்றனர். கடந்தமுறை பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ஏசிஎஸ், இந்தமுறை இரட்டை இலை சின்னத்தில் களம் காண இருக்கிறார். இதில் வேலூர் தொகுதியோடு சேர்த்து அருகில் உள்ள 2 எம்.பி தொகுதிகளுக்கும் செலவு செய்வதாக அவர் உறுதியளித்திருக்கிறார். இதே உறுதிமொழியை பாரிவேந்தரும் கொடுத்திருக்கிறார். இதனால் 6 தொகுதிகளுக்கான கணக்கு வழக்குகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி தப்பிவிட்டார். இந்த இரண்டு சிறிய கட்சிகளும் தலா 100 கோடி ரூபாய் வரையில் செலவு செய்து தேர்தல் திருவிழாவை நடத்த இருக்கிறார்கள்.

-அருள் திலீபன்

 

தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் போட்டி?

More News >>