`52 பந்துகளில் 100 ரன் பாட்னர்ஷிப்! - கிளாசிக் கோலி - தோனி கூட்டணி

இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 191 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பந்துவீச தீர்மானித்தது. இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக தவான் அணியில் இடம்பிடித்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் அதிரடி காட்ட, மற்றொரு வீரரான ஷிகர் தாவன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 14 ரன்கள் எடுத்த நிலையில் தவான் விக்கெட்டை பறிகொடுத்தாலும் ராகுல் தொடர்ந்து அதிரடி காட்டினார். சிக்ஸர்களாக விளாசிய அவர், 47 ரன்களில் அவுட் ஆகி அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

தொடர்ந்து ஆடிய கேப்டன் கோலி மற்றும் தோனி ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்துள்ளது. . முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதால் இந்தப் போட்டியில் இந்திய வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>