தல அஜித் எப்படிப்பட்டவர்? - சுருதிஹாசன் ஜாலி டாக்!
நடிகர் அஜித்தை புகழ்ந்து பேசியுள்ளார் கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன்.
நடிகை சுருதிஹாசன் தற்போது படங்களில் எதுவும் நடிக்காமல் தனியார் நிகழ்ச்சிகளில், டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. வெளிநாட்டு காதலரை சுருதிஹாசன் கரம்பிடிக்க உள்ளார். இந்தநிலையில், சமீபத்தில் வேலூர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார் சுருதி. அங்கு அவர் மாணவர்கள் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது நடிகர் அஜித் குறித்து மாணவர் ஒருவர் கேள்வி எழுப்ப அதற்கு, ``நான் சந்தித்ததில் பண்பான நடிகர் என்றால் அது அஜித் தான். எனக்கு பிடித்த நடிகர்களில் அஜித்தும் ஒருவர்" எனக் கூறியுள்ளார்.
இதேபோல் சிறந்த நடிகர் என்றால் தன் தந்தை கமல்ஹாசன் தான் என்றும் அவரின் மகாநதி படம் மிகவும் பிடிக்கும் என்றும் சுருதி தெரிவித்துள்ளார். இதேபோல் நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என்பதையெல்லாம் தாண்டி தான் ஒரு ‘என்டர்டெயினராக’ இருப்பதையே பெரிதும் விரும்புவதாக அவர் கூறியுள்ளார். நடிகை சுருதிஹாசன் வேதாளம் படத்திலும், அவரது தங்கை அக்ஷரா ஹாசன் விவேகம் படத்திலும் அஜித்துடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.