`கிரிக்கெட்டை ரசிக்கும் ரசிகர்களே சாட்சி - இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா உருக்கம்!

இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா மீது இலங்கைக் கிரிக்கெட் வாரியத்தில் தேர்வுக்குழுத் தலைவராக பதவி வகித்தபோது வீரர்களைத் தேர்வு செய்ததில் முறைகேடு நடத்தியதாக மீது புகார் கூறப்பட்டது. இந்த புகார் தொடர்பான விசாரணைக்கும் ஆஜராகவில்லை எனவும் அவர் மீது கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது. இந்தநிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு தற்போது நிரூபணம் செய்யப்பட்டு அவருக்கு இரண்டு வருடம் தடை விதித்துள்ளது ஐசிசி. இந்த தடை காரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் தொடர்பான எந்த நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்ளக்கூடாது என ஐசிசி அறிவித்துள்ளது. கிரிக்கெட் உலகில் உச்சத்தில் கொடிகட்டி பறந்த சனத் ஜெயசூர்யா தற்போது முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளாகி தண்டனை பெற்றுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, இந்த தண்டனை குறித்து ஜெயசூர்யா தற்போது பேசியுள்ளார். அதில், ``என் மீதான புகார்கள் குறித்து அனைத்து தகவல்களையும் நான் கொடுத்தேன். எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் என் மீது இல்லை. இதேபோல் உள்தகவலைப் பரிமாறியதாகவும் குற்றச்சாட்டுகள் கிடையாது. என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் உயர்ந்தபட்ச நேர்மையைக் கடைபிடித்து ஆடிவந்துள்ளேன். நான் எப்போதும் நாட்டுக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறேன். இந்த தண்டனையும் அது போலவே. கிரிக்கெட் மீதுள்ள நேயத்தால் 2 ஆண்டுகள் தடையை ஏற்று கொள்கிறேன். எனது இந்த தன்மைக்கு கிரிக்கெட்டை ரசிக்கும் ரசிகர்களே சாட்சி" எனக் கூறியுள்ளார்.

தண்டனைக்கு பிறகு வாய் திறந்துள்ள ஜெயசூர்யா ஐசிசி கேட்டுக்கொண்டபோது சரியாக ஒத்துழைக்கவில்லை. அதனாலேயே அவருக்கு தற்போது தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அவர் சரியாக விளக்கம் அளித்திருந்தால் இந்த தண்டனையில் இருந்து அவர் தப்பித்து இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>