இந்தியாவில் 5ஜி சோதனை முயற்சி: ஒன்பிளஸ் இறங்குகிறது

ஸ்பெயின் தேசத்தில் பார்ஸிலோனா நகரில் உலக மொபைல் மாநாடு நடந்து வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் புதிய போன்களை அறிமுகம் செய்கின்றன. அவ்வாறு ஒன்பிளஸ் நிறுவனம் குவல்காம் ஸ்நப்டிராகன் 855 ப்ராசஸருடன் கூடிய 5ஜி போனை காட்சிப்படுத்தியுள்ளது.

சோதனை ரீதியாக இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை என்னும் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பார்க்க இருப்பதாகவும் ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2016ம் ஆண்டிலிருந்து 5ஜி குறித்த ஆய்வுகளை ஒன்பிளஸ் நிறுவனம் செய்து வருகிறது. 2017ம் ஆண்டு முதல் குவல்காம் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தது. 2018 ஆகஸ்ட் மாதம் ஒன்பிளஸ் தொழில்நுட்ப குழுவினர் குவல்காம் ஆய்வகத்தில் 5ஜி இணைப்பை நிறுவினர்.

"நாங்கள் குவல்காம் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இரு நிறுவனங்களிடையே காணப்படும் வலுவான பிணைப்பு காரணமாக 5ஜி சாதனத்தை உருவாக்கி உலகிற்கு அளிப்போம்," என்று ஒன்பிளஸ் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பீட் லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More News >>