மக்களவைத் தேர்தல் தேதி - மார்ச் 8-ல் அறிவிப்பு வெளியாகிறது?
மக்களவைத் தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 8-ந்தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிகிறது.
மக்களவைத் தேர்தல் நடவடிக்கைகளை மே 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பதால் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தலைமை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. அனைத்து மாநில தேர்தல் ஆணையர்கள், மாநில தலைமைச் செயலர்கள், போலீஸ் டிஜிபிக்களிடம் தேர்தல் குறித்த ஆலோசனைகளை நடத்தி முடித்துவிட்டது.
இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 8-ந்தேதி வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 22 அல்லது 25-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.