வேட்டி கட்டிய ஜெயலலிதா, எடப்பாடி! மந்திரி பதவிக்காக துதிபாடிய தோப்பு வெங்கடாச்சலம்

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான குளங்கள், ஆயிரக்கணக்கான குட்டைகளுக்கு நீர் நிரப்பும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது கொங்கு மக்களின் நீண்டகால கோரிக்கை. கடந்த 70 ஆண்டுகளாக இதுதொடர்பான கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

முதல் அமைச்சர் எடப்பாடியும், இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்து இருந்தார். அதன்படி ரூ.1,532 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது.

இன்று இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா அவினாசி-கோவை பைபாஸ் சாலையில் எம்.நாதம்பாளையம் பிரிவு எதிரே அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட பந்தலில் நடைபெற்றது. இந்த விழாவில் எடப்பாடியை புகழ்ச்சி மழையில் நனைய வைத்துவிட்டார் எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம்.

தினகரன் அணியில் இருந்து பிரிந்து வந்தவர், எப்படியாவது தன்னை எடப்பாடி பழனிசாமி அமைச்சர் ஆக்குவார் எனக் காத்திருந்தார்.

கேபினட்டில் இடம் பெறப் போகிறேன் என சொந்தங்களிடமும் பேசி வந்தார். அதற்கான எந்த அறிகுறியும் தென்படாததால், இன்று எடப்பாடியை புகழ்ந்து பேசினார்.

குறிப்பாக, வேட்டி கட்டிய ஜெயலலிதா என முதல் அமைச்சரைப் புகழ்ந்ததை யாரும் எதிர்பார்க்கவில்லையாம். அவர் பேச்சைக் கேட்ட சக எம்எல்ஏக்களோ, மந்திரி பதவிக்காக 100 பேர் வரையில் காத்திருக்கிறார்கள். தினகரன் பக்கம் போனவருக்கெல்லாம் எடப்பாடி பதவி கொடுக்க மாட்டார் எனக் கமெண்ட் அடித்தார்களாம்.

More News >>