அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை முழுவதும் நீக்கியது யூ டியூப்!

பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் தொடர்பான அனைத்து வீடியோக்களையும் மத்திய அரசு வேண்டுகோளை ஏற்று யூ டியூப் நீக்கி உள்ளது.

இந்திய விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் தாக்கப்பட்ட வீடியோ, அவரிடம் விசாரணை நடத்தப்படும் வீடியோ ஆகியவை வெளியாகி சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தின. பாகிஸ்தான் ராணுவத்திடம் நெஞ்சை நிமிர்த்தி அவர் பேசும் வீடியோக்கள் பெரும் வைரலாகின.

ஆனால் இந்த வீடியோக்கள் வெளியானதை மத்திய அரசு விரும்பவில்லை. இதையடுத்து அபிநந்தன் தொடர்பான அனைத்து வீடியோக்களையும் நீக்கிவிடுமாறு யூ டியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு வேண்டுகோள் வைத்தது.

இதனை ஏற்று அனைத்து அபிநந்தன் வீடியோக்களையும் யூ டியூப் நிர்வாகம் நீக்கிவிட்டது.

 

இந்திய விமானி அபினந்தன் வாகா எல்லையில் இன்று விடுவிப்பு!

More News >>