சிறிசேனாவை கொல்ல சதி... இந்தியர் விடுதலை

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட இந்தியரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

சிறிசேனாவை கொல்ல சதி செய்ததாக கேரளாவை சேர்ந்த தாமஸ் என்பவர் இலங்கை போலீசார் கைது செய்தனர். இது இந்தியா- இலங்கை இடையேயான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது.

தம்மை கொல்ல இந்தியா சதி செய்வதாக சிறிசேனா பகிரங்கமாகவும் குற்றம்சாட்டினர். ஆனால் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு தாம் அப்படி பேசவே இல்லை எனவும் விளக்கம் தந்திருந்தார் சிறிசேனா.

இக்கொலை சதியில் ராஜபக்சே குடும்பத்துக்கும் தொடர்பிருக்கலாம் எனவும் இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. இந்நிலையில் தாமஸ் மீது அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாது என கூறி அந்நாட்டு நீதிமன்றம் தாமஸை விடுதலை செய்தது.

இருப்பினும் இலங்கை குடிவரவுச் சட்டத்தை மீறியதற்காக மார்ச் 13 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சிறிசேனா படுகொலை சதித்திட்டத்தில் ராஜபக்சே மகனுக்கு தொடர்பு?

More News >>