மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள்- திமுகவினர் கொண்டாட்டம்- மமதா ட்வீட்டரில் வாழ்த்து!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை இன்று திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1-ந் தேதியை இளைஞர் எழுச்சி நாளாக திமுகவினர் கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு தமது பிறந்த நாளை முன்னிட்டு விழாக்கள் எதுவும் வேண்டாம் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கருணாநிதி மறைவால் தாம் பிறந்த நாளை கொண்டாடவில்லை என கூறியிருந்தார். அதேநேரத்தில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தலாம் எனவும் திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

இதையடுத்து இன்று ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதனிடையே மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி ட்விட்டரில் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

தி. மு. க. தலைவர் கருணாநிதி அவர்களின் வாழ்க்கை வரலாறு

More News >>