மோடி இன்று குமரி வருகை- உச்சகட்ட பாதுகாப்பு- வைகோவின் கறுப்பு கொடி போராட்டத்தால் டென்ஷன்!!
அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை தருகிறார். மோடிக்கு கறுப்புக் கொடி காட்டப் போவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்திருப்பதால் அங்கு டென்ஷன் நிலவுகிறது.
பிரதமர் மோடி விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று காலை திருவனந்தபுரம் வருகை தருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார்.
அங்கு நடைபெற உள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்கான நடவடிக்கைகளை மதிமுக பொதுச்செயலர் வைகோ மும்முரமாக மேற்கொண்டு வருவதால் அங்கு டென்ஷனான நிலைமை நிலவுகிறது.