ஐதராபாத்துக்கு வந்தா அவ்வளவுதான்...!சானியாவின் கணவர் சோயப் மாலிக்கிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம், இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சோயப் மாலிக் தம்பதிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானுக்கு ஆதரவாக சோயப் டிவிட்டரில் பதிவிட, ஐதராபாத்துக்கு வந்தா அவ்வளவுதான்... என்று தெலுங்கானாவாசிகள் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்திய டென்ன்ஸ் நட்சத்திரம் சானியாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். சானியா மிர்சா ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இந்தியா சார்பில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஆடிவரு கிறார். தெலுங்கானா மாநில அரசின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர்ப் பதற்றம் சானியா குடும்பத்திலும் புயலை வீசியுள்ளது. கடந்த புதனன்று பாகிஸ்தான் படை விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்தைக் குறிப்பிட்டு, ஹமாரா பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று பாகிஸ்தான் ஆதரவு கோஷத்தை சோயப் மாலிக் பதிவிட்டிருந்தார். இதற்கு தெலுங்கானா வாசிகள் சோயப் மாலிக்கை வறுத்து எடுத்து வருகின்றனர்.

ஐதராபாத்துக்குள் நுழைய முடியாது, வந்தா அவ்வளவுதான், என்ன நடக்கும்னு தெரியாது என்று சோயப் மாலிக்கிற்கு எதிராக டிவீட் செய்து வருகின்றனர். பாஜக எம்எல்ஏ ராஜா சிங் என்பவர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், சானியாவின் அரசு தூதர் அந்தஸ்தை பறிக்க வேண்டும். சோயப் மாலிக்கை தெலுங்கானா மாநிலத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்றுள்ளார்.

More News >>