மீண்டும் சமூக வலைதளங்களில் விஸ்வரூபமெடுக்கும் #Goback Modi! தமிழகத்துடன் கை கோர்த்தது ஆந்திரா!
பிரதமர் மோடியின் ஆந்திரா, தமிழகம் வருகைக்கு எதிராக சமூக வலைதளங்களில் #Goback Modi ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
மோடியின் ஆந்திரா வருகையைக் கண்டித்து தெலுங்குதேசம் கட்சியினர் நேற்றே அம்மாநிலத்தின் பல இடங்களில் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டனர். இன்று விசாகப்பட்டினத்தில் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியின் போதும் கறுப்பு பலூன்கள், கறுப்பு கொடி காட்டுவதாக அறிவித்துள்ளனர்.
இதேபோல் தமிழகத்தின் கன்னியாகுமரிக்கும் மோடி வருகிறார். அவரது வருகைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையில் கறுப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.
இதற்காக கடந்த சில நாட்களாக தென் தமிழகத்தில் வைகோ முகாமிட்டுள்ளார். இந்நிலையில் வழக்கம் போல சமூக வலைதளங்களில் #Goback Modi டிரெண்டாகி வருகிறது.