கன்னியாகுமரியில் பிரதமர் மோடி - ரூ.40 ஆயிரம் கோடியில் திட்டங்களை தொடங்கி வைத்தார்!

கன்னியாகுமரியில் நடந்த மத்திய அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, தமிழகத்தில் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனி விமானத்தில் திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடியை கேரள ஆளுநர் சதாசிவம் வரவேற்றார். பின்னர் ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி விமான தளம் வந்து இறங்கினார். அங்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.

பின்னர் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். பாம்பன் புதிய ரயில் பாலம், சென்னை - மதுரை இடையேயான தேஜஸ்வி ரயில் துவக்க விழா, மதுரை - ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை உள்ளிட்ட சுமார் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

More News >>