ஸ்டாலினைவிட எடப்பாடி மேல்! உற்சாகத்தில் பிரேமலதா

அதிமுக, தேமுதிக தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதில் பிரேமலதா அதிக உற்சாகத்தில் இருக்கிறார். ஃபைனான்ஸ் விவகாரத்தில் திமுகவைவிட எடப்பாடி எவ்வளவோ மேல் என உற்சாகத்தில் இருக்கிறது கோயம்பேடு முகாம்.

கன்னியாகுமரிக்கு இன்று பிரதமர் மோடி வந்திருப்பதால், கூட்டணி அறிவிப்பையும் இன்றே வெளியிடுவது என்ற முடிவில் இருந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்திய விமானி அபிநந்தன் மீட்பு உட்பட அரசியல்ரீதியாக வேறு பணிகள் இருப்பதால், தமிழக பாஜக பிரமுகர்களால் கூட்டணி அறிவிப்பு நேரத்தில் கலந்து கொள்ள முடியுமா என்ற சந்தேகம் இருந்தது.

எனவே கூட்டணி அறிவிப்பை இன்று இரவு அல்லது நாளை வெளியிடுவது என முடிவெடுத்துள்ளனர். அதிமுகவோடு தேமுதிக சேருவதால் எந்த நட்டமும் இல்லை என திமுக உறுதியாக நம்புகிறது.

வடமாவட்டங்களில் பாமகவுக்கு தேமுதிக எந்தவித தேர்தல் வேலைகளையும் பார்க்காது எனவும் ஸ்டாலின் நம்புகிறார். 2014 தேர்தலில் வன்னிய வேட்பாளர்களைப் போடக் கூடாது என தேமுதிகவுக்கு பாமக வைத்த டிமாண்டுகளால் படுதோல்வியை சந்தித்தார் விஜயகாந்த்.

இந்தமுறையும் அவர்கள் இருவரும் மோதிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கிறார். அதிமுக தரப்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைப் பற்றிப் பேசும் தேமுதிகவினர், 5 சீட்டுடன் ஒரு ராஜ்யசபா சீட் பிளஸ் 21 தொகுதி தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அதிமுகவிடம் சில கோரிக்கைகளை பிரேமலதா வைத்தார்.

அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டார். தொகுதிக்கு 50 கோடி எனக் கணக்கிட்டு அட்வான்ஸ் தொகையைக் கொடுக்கவும் சம்மதித்துவிட்டார்.

எங்களுடைய வலிமையை திமுக உணரவில்லை. தேர்தல் முடிவில் ஸ்டாலின் புரிந்து கொள்வார்' எனப் பேசி வருகின்றனர்.

- அருள் திலீபன்

More News >>