குறித்த காலத்திற்குள் மக்களவைத் தேர்தல் நடைபெறும் - தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம்!
எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் மக்களவைத் தேர்தல் தள்ளி வைக்கப்பட மாட்டாது என்றும் திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் பொதுத் தேர்தல் தள்ளிப்போகும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற சுனில் அரோரா, மே மாத மத்திக்குள் தேர்தல் நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக லக்னோவில் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.