சுவையான சில்லி சப்பாத்தி ரெசிபி
சில்லி பரோட்டா சாப்பிட்டுருப்பீங்க.. சில்லி சப்பாத்தி சாப்பிட்டுருக்கீங்களா ? சரி இப்போ சில்லி சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்ப்போம்..
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி துண்டுகள் - 1 பௌல்
எண்ணெய்
கறிவேப்பிலை
இஞ்சி
பூண்டு
பச்சை மிளகாய்-2
வெங்காயம் - 1
குடை மிளகாய் - 1
மிளகாய்த்தூள்
கரம் மசாலா
குழம்பு மிளகாய்த்தூள்
தக்காளி சாஸ்
கொத்தமல்லி
உப்பு
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை போட்டு தாளித்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி அத்துடன், உப்பு, குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர், மிளகாய்த்தூள், கரம் மசாலா, குழம்பு மிளகாத்தூள், தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்றாக வதங்கியதும், சப்பாத்தி துண்டுகள் சேர்த்து தீ அதிகமாக வைத்து நன்றாக கிளறி வேக வைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.
அவ்ளோதாங்க சுவையான சில்லி சப்பாத்தி ரெடி..!