தித்திப்பான அவல் ரெசிபி

தித்திப்பான அவல் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

அவல் - 1 கப்

வெல்லம் - முக்கால் கப்

தேங்காய் துருவல் - அரை கப்

தண்ணீர் - கால் கப்

முந்திரி - 10

ஏலக்காய் பொடி - சிறிதளவு

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

முதலில், முந்திரிப்பருப்பை நெயில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில், வெல்லம் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

வெல்லம் நன்றாக கரைந்ததும், ஒரு பௌலில் அவள் போட்டு அத்துடன் வெல்லம் தண்ணீரை வடிகட்டி சேர்த்து கிளறவும்.

பின்னர், துருவிய தேங்காய், ஏலக்காய்ப் போடி, வறுத்த முந்திரி சேர்த்து கிளறினால் தித்திப்பான அவல் ரெசிபி ரெடி..!

More News >>