எல்லையில் பாகிஸ்தான் தொடர் தாக்குதல்: 3 பொதுமக்கள் பலி
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 3 அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணா காடி செக்டார் பகுதியில் கடந்த சில நாட்களாக பொதுமக்களின் குடியிருப்புகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் இந்த எல்லை மீறிய தாக்குதலில் இதுவரை அப்பாவி பொதுமக்கள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பூஞ்ச் காவல்துறை அதிகாரி எஸ்.எஸ்.பி. அகர்வால் தெரிவித்துள்ளார்.