திருமணம் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்... இயக்குநர் சேரன் பெருமகிழ்ச்சி!

இயக்குநர் சேரன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கிய திருமணம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மகிழ்ச்சியை தமது சமூக வலைதள பக்கங்களில் சேரன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இயக்குநர் சேரனின் பாரதி கண்ணம்மாவை பார்த்து அதிர்ந்து போகாதவர்கள் இருக்க முடியாது என்பது முதல் ஒவ்வொரு படமும் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஆயிரம் ஆயிரம். ஆட்டோகிராப் இப்படித்தான் இருக்கலாம் என்பதால் அசைபோட விரும்பாத நெஞ்சங்கள் அந்த படத்தை கனத்த இயத்தோடு கண்ணீரை அடக்கிக் கொண்டு பார்த்த காலம் உண்டு.

யதார்த்த வாழ்வையும் சமூக அவலங்களையும் முகத்தில் அறைந்தாற் போல் சொல்லிவிடும் இயக்குநர் சேரன் நீண்ட போராட்டத்துக்குப் பின் தமிழ் திரை உலகில் தவழவிட்டிருக்கும் படைப்புதான் திருமணம். பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான திருமணம் படுகோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதோ இயக்குநர் சேரனின் பெருமகிழ்ச்சியான தருணங்கள்:

More News >>