தூத்துக்குடியில் போட்டியிட மாட்டேன் சரத்குமார் திடீர் அறிவிப்பு!
மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட்டால் அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை களமிறக்க திட்டமிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அதிமுக கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், மக்களவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து வரும் 5-ந் தேதி அறிவிக்கப்படும். தூத்துக்குடி தொகுதியில் நான் போட்டியிட மாட்டேன் என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.