அதிமுகவுடன் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

அதிமுக கூட்டணியில் தேமுதிக சேருவது உறுதியான இரு கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ளது. இன்றே தொகுதி உடன்பாடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேமுதிக எந்தக் கூட்டணியில் சேரப்போகிறது என்பது கடந்த சில நாட்களாக மதில்மேல் பூனையாக இருந்து வந்தது. இதற்குக் காரணம் அதிமுக, திமுக என இரு தரப்பிலுமே கூட்டணிப் பேரத்தை தேமுதிக இழுத்தடித்தது தான். திமுக ஓரளவுக்கு இறங்கி வந்தாலும், தேமுதிகவின் டிமாண்டுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் உதறி விட்டது.

இதனால் மீண்டும் அதிமுகவுடன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தையில் தேமுதிகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் என உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.

அடுத்த கட்டமாக அதிமுகவுடனான தேமுதிகவின் நேரடிப்பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர் கிரவுன் பிளாசா ஓட்டலில் பேச்சு நடத்த 2 ள்ளனர். இதனால் இன்றே அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கான தொகுதி உடன்பாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

More News >>