முற்றிலும் பிடிக்காதவர்களை தோற்கடிப்போம்! திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் நடத்தும் திடீர் சர்வே

மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியோடு கூட்டணி என்பதைப் பற்றி அண்ணா திராவிடர் கழகம் இன்னமும் அறிவிக்கவில்லை. ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை மன்னார்குடியில் நடத்திய கையோடு, அடுத்தகட்டமாக சென்னையிலும் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளார் திவாகரன்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பிரதமரின் தனி ஆலோசகருடன் சந்திப்பு எனக் களைகட்டியது அண்ணா திராவிடர் கழக முகாம்.

இந்தநிலையில், எம்.பி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு சமூகவலைத்தளத்தில் சர்வே ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த். சர்வே தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், தமிழக அரசியலில் சிறிய அளவிலான வாக்குகள் பெரிய கட்சிகளை தோற்கடித்த வரலாறு உண்டு.

அந்த வகையில் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் நாங்கள் எந்த கூட்டணியை எம்.பி தேர்தலில் ஆதரிக்க வேண்டும்? (யாரையும் பிடிக்கவில்லை என்றாலும் பிடிக்காதவர்களில் சிறந்தவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் முற்றிலும் பிடிக்காதவர்கள் தோல்வி அடைவார்கள்) எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் குறிப்பிட வருவது பாஜக அணியையா காங்கிரஸ் அணியையா என்ற குழப்பம், அக்கட்சி பொறுப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More News >>