மார்ச் 13-ல் தமிழகம் வருகிறார் ராகுல் - திமுக கூட்டணி தலைவர்களுடன் ஒரே மேடையில் பிரச்சாரம்!
தமிழகத்தில் திமுக கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் தலைவர் வரும் 13-ந் தேதி தொடங்கி வைக்கிறார். பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில்,
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் வரும் 13-ந் தேதி வருகிறார். பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். ராகுல் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் திமுக கூட்டணித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது