இந்தியப்படை விமானி அபிநந்தனுடன் ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சந்திப்பு!
பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சந்தித்தார்.
பாகிஸ்தான் பிடியில் சிக்கிய அபிநந்தன் 3 நாட்களுக்குப் பின் நேற்று இரவு இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டார். வாகா எல்லையிலிருந்து டெல்லி அழைத்துச் செல்லப் பட்ட அபிநந்தனிடம் விமானப் படை உயர் அதிகாரிகள் விசாரனை நடத்திய பின் மருத்துவ பரிசோதனைக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அபிநந்தனை இன்று பிற்பகல் ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சந்தித்தார். அப்போது பாகிஸ்தான் பிடியில் இருந்த போது நடந்த சம்பவங்கள் குறித்து அபிநந்தன் விவரித்ததாகக் கூறப்படுகிறது.