ஐதராபாத் ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 237 ரன் வெற்றி இலக்கு!
ஐதராபாத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் திணறிய ஆஸ்திரேலியா, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் ஆஸி.கேப்டன் ஆரோன் பின்ச்.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் பும்ரா பந்தில் பின்ச் டக் அவுட்டானார்.தொடர்ந்து இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் ரன் எடுக்க முடியாமல் ஆஸி வீரர்கள் திணறினர். சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளும் விழ, 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. கவாஜா மட்டுமே அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் சமி, பும்ரா, குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா ஆடி வருகிறது