இது என்னடா மதுரை திமுகவுக்கு வந்த சோதனை.. .அழகிரிக்கு அஞ்சி பம்மும் வேட்பாளர் விரும்பிகள்!
காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக என வலிமையான கூட்டணிக்காக போராடுகிறது திமுக. ஆனால் அக்கட்சியின் பல தொகுதிகளில் வலுவான வேட்பாளர்கள் இவர்கள்தான் என சுட்டிக்காட்ட முடியாத நிலை இருக்கிறது.
தென்சென்னையில் தமிழச்சி பாண்டியன், வடசென்னையில் காவிய கணேசன் அல்லது டாக்டர் கலாநிதி இப்படித்தான் இருக்கிறது திமுகவின் பட்டியல். தென்மாவட்டத்தில் தூத்துக்குடியில் கனிமொழியைத் தவிர வலிமையான வேட்பாளர் கண்ணுக்கு எட்டிய தொலைவில் காணோம்.
திண்டுக்கல்லில் இதனால் பேசாமல் காங்கிரஸுக்கு கொடுத்துவிடலாம் என்கிற மனநிலையில் திமுகவினர் இருக்கின்றனர். மதுரையிலோ அதகளம்..
நாம தேர்தலில் நிற்கிறோம்.. அல்லது வேட்பாளராக விருப்ப மனு கொடுக்கிறோம் என தெரிந்தால் அழகிரிக்கும் பகையாக நேரிடும்.. அவரை எதிர்த்து நின்றால் தோற்பதும் உறுதி என்பதால் ரொம்பவே பம்முகிறார்களாம் திமுக தலைகள்.
அதனால்தான் இதென்னடா மதுரை திமுகவுக்கு வந்த சோதனை என புலம்புகின்றனராம் உடன்பிறப்புகள்!