உங்க மகனுக்கு சீட் இல்லை... துரைமுருகனுக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்... பெரும் புகைச்சல்!
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் கட்சித் தலைவர் ஸ்டாலின். இதனால் மிக உச்சகட்ட அதிருப்தியில் இருக்கிறாராம் துரையார்.
தாம் செல்வாக்குடன் இருக்கும் காலத்திலேயே வாரிசான கதிர் ஆனந்தை அரசியலில் கோலோச்ச வைத்துவிட வேண்டும் என்பது துரையாரின் கணக்கு. ஆனால் காலம் கனியாமலே போய்க் கொண்டிருக்கிறது.
லோக்சபா தேர்தலில் வேலூரில் மகனை களமிறக்குவது என வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கினார் துரையார். அதற்காக பாமகவை திமுக கூட்டணிக்கு கொண்டு வருவதற்கும் போராடிப் பார்த்தார்.
ஒன்றுமே கை கூடவில்லை. இதன் உச்சகட்டமாகத்தான் உங்க மகனுக்கு சீட் இல்லை என அதிர்ச்சி அளித்திருக்கிறார் ஸ்டாலின். இது தொடர்பான அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகனுக்கும் ஸ்டாலினுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் நடந்ததாம்.
இப்புகைச்சல் எங்கே போய் முடியுமோ? என்கிற பதைபதைப்பில் இருக்கிறது வேலூர் திமுக.