கமகமக்கும் நெய் சாதம் ரெசிபி
சுவையான நெய் சாதம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 15 -20
கிஸ்மிஸ் - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
பிரியாணி இல்லை - 2
ஏலக்காய் - 3
நட்சத்திர சோம்பு - 1
கிராம்பு - 4
பட்டை - 1
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
பஸ்மாத்தி அரிசி - 2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில், ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு போட்டு வறுத்து தனியாக எடுக்கவும்.
அதே வாணலியில் ஒரு பிடி வெங்காயம் போது வறுத்து தனியாக எடுக்கவும்.
பின்னர், பிரியாணி செய்யும் வாணலியில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு, வெங்காயம் சேர்த்து வதக்கி பொன்னிறமானதும் கழுவி வாய்த்த பாஸ்மதி அரிசியை சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைக்கவும்.
பின்னர், 2 டம்ளர் அரிசிக்கு மூன்றரை கப் தண்ணீருடன் உப்பு சேர்த்து கிளறி வேகவைக்கவும்.
சாதம் நன்றாக வெந்ததும் கொஞ்சம் நெய் ஊற்றி, வருது வைத்த முந்திரி, வெங்காயம் சேர்த்து கிளறி இறக்கவும்.
அவ்ளோதாங்க சுவையான நெய் சாதம் ரெடி..!