ஜெய்ஸ் இ முகம்மது தீவரவாத இயக்கத் தலைவன் மசூத் அசார் உயிரிழப்பா?-மாறுபட்ட தகவல்களால் குழப்பம்!

பாகிஸ்தான் ஆதரவு தீவரவாத இயக்கமான ஜெய்ஸ் இ முகம்மது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் உயிரிழந்து விட்டதாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

50 வயதான மசூத் அசாரை குறிவைத்தே கடந்த 26-ந்தேதி பாலகோட் தீவரவாத முகாம் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. மசூத் அசாருக்கு பாகிஸ்தான் புகழிடம் வழங்கி வருகிறது என்று இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.

முதலில் இதை மறுத்து வந்த பாகிஸ்தான், கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் மசூத் அசார் தங்கள் நாட்டில் இருப்பதை ஒத்துக் கொண்டது. உடல் நலமின்றி மசூத் அசார் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில் கல்லீரல் பாதிப்பால் ராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மசூத் அசார் நேற்று இரவு இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மற்றொரு புறம் இந்தியா நடத்திய விமானத் தாக்குதலில் மசூத் அசார் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மசூத் அசார் இறந்த தகவல் குறித்து பாகிஸ்தான் அரசு இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை

 

More News >>