நானும் அரசியலுக்கு வருவேன்... நடிகை வரலட்சுமி ஷாக் பேட்டி
தாமும் அரசியலுக்கு வரப்போவதாக நடிகை வரலட்சுமி தடாலடியாக அறிவித்துள்ளார்.
சென்னையில் தமது பிறந்த நாளையொட்டி நலத் திட்ட உதவிகளை வரலட்சுமி வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் வரலட்சுமி கூறியதாவது:
சரத்குமாரின் அரசியலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் அரசியலைக் கற்றுக் கொண்டு இருக்கிறேன்.
நன்கு கற்றுக் கொண்ட பிறகு அரசியலுக்கு வருவேன்.
இவ்வாறு வரலட்சுமி கூறினார்.