தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து பலியாடாக தமிழிசை! சிவகங்கையில் எச். ராஜா
லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் பாஜகவுக்கு வடசென்னை, கோவை, தூத்துக்குடி, நாகர்கோவில் சிவகங்கை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம். தூத்துக்குடியில் திமுக வேட்பாளராக களமிறங்கும் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட உள்ளாராம்.
பாஜகவில் கோவை தொகுதியைப் பெறுவதில் வானதி சீனிவாசனுக்கும் சி.பி.ஆருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக கொங்கு அமைச்சர்கள் களத்தில் நிற்கின்றனர்.
இதனால் திருப்பூரை கேட்டுப் பெறுவதில் முனைப்பு காட்டினார் தமிழிசை சவுந்தரராஜன். அப்போதே தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக என்னை நிற்க சொல்லி பலியாடாக்கப் பார்க்கிறார்கள் என புலம்பினார் தமிழிசை.
திருப்பூர், பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் வடசென்னை அல்லது தூத்துக்குடியில் தமிழிசை போட்டியிடும் நிலை உருவாகி உள்ளது.
சிவகங்கையில் எச். ராஜா, நாகர்கோவிலில் பொன். ராதாகிருஷ்ணன் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர்.