அமெரிக்காவின் அலபாமாவில் வாரிச் சுருட்டிய பயங்கர சூறாவளி - 15 பேர் பலி, பலர் காயம்
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் அடுத்தடுத்து சுற்றிச் சுழன்றடித்த பயங்கர சூறாவளியில் சிக்கி 15 பேர் பலியாகியுள்ளனர். பலரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
அலபாமா மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதி மற்றும் ஜார்ஜியா மாகாணம் அருகில் சில பகுதிகளில் ஞாயிறு பிற்பகலில் அடுத்தடுத்து பலத்த வேகத்துடன் சூறாவளி சுழன்றடித்தது. இதில் வீடுகளின் மேற்கூரைகள், வாகனங்கள் காற்றில் பறந்தன. ஒபேலிக்கா என்ற இடத்தை மையம் கொண்ட சூறாவளியில் அங்கு மட்டும் 12 பேர் உயிரிழந்தனர்.
இதுவரை 15 பேர் உயிரிழந்த நிலையில் பலரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டு தேடுதல் நடக்கிறது. மேலும் கடுமையான சூறாவளி வீசக்கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கையால் அலபாமாவில் சூறாவளி அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது