ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ 2000 சிறப்புர நிதி வழங்கும் திட்டம் - முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்

ஏழைத் தொழிலாை ர்களுக்கு ரூ 2000 சிறப்பு நிதி வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ 2000 சிறப்பு நிதி வழங்கப்படும் என கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. இதற்கான கணக்கெடுக்கும் பணி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்றது.இந்தப் பணத்தைப் பெற அனைத்து தரப்பினரும் விண்ணப்பித்ததால் ஏகப்பட்ட குளறுபடிகளும் நடந்தது. மேலும் தேர்தலை குறி வைத்து ஆளும் கட்சியினர் தங்களுக்கு ஆதரவானவர்களுக்கு வழங்க முயல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் ரூ 2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்தப் பணம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்பதால், வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டதற்கான ரசீதுகளை விழாவில பங்கேற்ற பயனாளிகளுக்கு முதல்வர் வழங்கினார்

More News >>