திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக இன்று விறுவிறுப்பாக நடத்தி வருகிறது.விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடானது.

தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியுடன் நடந்த பேச்சுவார்த்தை இழுபறியாக நாளை 3-ம் கட்ட பேச்சு நடைபெறும் என தெரிவித்து விட்டு அக்கட்சியினர் சென்றனர். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசனும் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. இது வெற்றிக் கூட்டணி .21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் விவாதிக்கப்படும் என்றார் முத்தரசன்.

More News >>