ஈசி பிரேக்ஃபாஸ்ட் ரவா இட்லி ரெசிபி
எப்பவும் அரிசி மாவு இட்லி செய்து ரொம்பவும் போர் அடிக்குதா ? கவலையே வேண்டாம். இன்னைக்கு நாம் ஈசியா செய்யக்கூடிய ரவா இட்லி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை & 1 கப்
எண்ணெய் & 1 டேபிள் ஸ்பூன்
கடுகு & சிறிதளவு
உளுத்தம் பருப்பு& 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு & 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய இஞ்சி & 1 துண்பு
நறுக்கிய பச்சை மிளகாய் & 2
கறிவேப்பிலை & சிறிதளவு
துருவிய கேரட் & 1
வெங்காயம் & பாதி
தயிர் & அரை கப்
பேக்கிங் சோடா & 1 சிட்டிகை
உப்பு & சிறிதளவு
கொத்தமல்லி & சிறிதளவு
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அது சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
அத்துடன், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்னர், கேரட் சேர்த்து மிதமான சூட்டில் 2 நிமிடங்கள் வதக்கவும். அடுத்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் ரவை சேர்த்து நன்றாக வறுத்தெடுத்து இறக்கவும்.
இந்த மசாலா கலவை ஆறியப் பிறகு, தயிர் மற்றும் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பின்னர், இட்லி தட்டில் எண்ணெய் தடவி ரவை மாவை ஊற்றி இட்லி குக்கரில் வைத்து 10 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான ரவா இட்லி சாப்பிட ரெடி..!