சிறார்களுக்கு தேசிய வீரதீர செயலுக்கான விருதுகள்: பிரதமர் மோடி வழங்கினார்
புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற விழாவில் 18 சிறுவர் சிறுமிகளுக்கு தேசிய வீரதீர செயலுக்கான விருதுகளை பிரதமர் மோடி வழங்கி கவுரவித்தார்.
நாட்டில் வீரதீர செயல் புரிந்த சிறுவர் சிறுமிகளுக்காக பாரத் விருது, கீதா சோப்ரா விருது, சஞ்சய் சோப்ரா விருது, பப்பு கைதானி விருது மற்றும் தேசிய வீரதீர செயல் விருது என 5 பிரிவுகளில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான வீரதீர விருதுக்கு 18 சிறுவர் சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேர் சிறுமிகள். இவற்றில் 3 விருதுகளை பெற வேண்டியவர்கள் இறந்துவிட்டனர்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் தேர்வு செய்யப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு பிரதமர் மோடி வீரதீர விருதுகளை நேற்று வழங்கி சிறப்பித்தார்.
அதன்பின்னர், பிரதமர் மோடி பேசுகையில், “உங்களது தைரிய செயல்கள் மற்ற குழந்தைகளுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை உணர்வையும் மற்ற குழந்தைகளிடம் ஏற்படுத்தும்” என தெரிவித்தார்.