`நேர்கொண்ட பார்வை-யில் அஜித் - தல 59 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

`விஸ்வாசம்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் தற்போது `தீரன் அதிகாரம்' ஒன்று இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியில் ஹிட் அடித்த 'பிங்க்' ரீமேக் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் மூலமாக வித்யா பாலன் தமிழில் முதல்முறையாக அறிமுகமாகிறார். அவர் தவிர ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரசிவந்திரன் எனப் புது கூட்டணியுடன் களமிறங்குகிறார் அஜித். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். மறைந்த நடிகை ஶ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குப்படி இந்தப் படத்தை போனி கபூருக்கு நடித்து கொடுத்து வருகிறார்.

இந்தப் படத்துக்காக அஜித் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தை ஒரே ஷெட்யூலில் முடித்து வரும் மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். `விஸ்வாசம்' படத்தை போலவே இந்தப் படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களே ரீலீசுக்கு இருப்பதால் படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மட்டும் டைட்டிலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, `நேர்கொண்ட பார்வை' எனப் பெயரிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் வக்கீல் வேடத்திலும், ஷ்ரத்தா ஶ்ரீநாத் குற்றவாளி கூண்டில் நிற்கும் காட்சிகள் உள்ளன. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்து அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது படக்குழுவினர். வழக்கம்போல இந்தப் படங்கள் மற்றும் டைட்டில் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

More News >>