ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி - ராசியான நாக்பூர் மைதானத்தில் ஆதிக்கம் செலுத்த தயாராகும் இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ராசியான நாக்பூர் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய வீரர்கள் பவுலிங், பேட்டிங்கில் சாதிக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக நடந்த 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து சாதித்து வரும் தோனி இந்திய அணிக்கு பெரும் பலமாக உள்ளார். கேதார் ஜாதவ் கூடுதல் பலமாக சாதித்து வருகிறார். பவுலிங்கிலும் முகமது சமி, குல்தீப் யாதவ் ஆஸி வீரர்களை கலங்கடித்து வருகின்றனர்.
மேலும் இன்று போட்டி நடைபெறும் நாக்பூர் மைதானமும் இந்திய அணிக்கு சாதகமானது. இந்த மைதானத்தில் இதுவரை ஆஸ்திரேலியாவுடன் மோதிய 3 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய போட்டியிலும் இந்தியா வெற்றிக் கொடி நாட்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது