பிரதமர் மோடிக்கு சாதகமாக தேர்தல் தேதி அறிவிப்பை தாமதப்படுத்துவதா..?- தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

பிரதமர் மோடிக்கு சாதகமாக தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகளில் கட்சிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டனர்.

பிரதமர் மோடி கடந்த 2 மாதங்களாக நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், பாஜக பிரச்சார பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார்.

தமிழகத்தில் மட்டும் மதுரை, திருப்பூர், கன்னியாகுமரி நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி 4-வது தடவையாக நாளை சென்னையில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதையெல்லாம் சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேர்தல் தேதி அறிவிப்பு செய்வதை தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல், கடந்த 2014 பொதுத் தேர்தலுக்கான தேதியை மார்ச் 5-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது .

தற்போது நாடு முழுவதும் மத்திய அரசின் விழாக்களை நடத்தி பாஜகவின் சாதனைகளை பிரதமர் மோடி தம்பட்டம் அடித்து வருகிறார். இவையெல்லாம் பெரும் அளவில் அரசு சாதனங்கள் மூலம் விளம்பரப்படுத்தப் படுகிறது. தேர்தல் அறிவித்துவிட்டால் இவ்வாறு விளம்பரப் படுத்த முடியாது என்பதால் தேர்தல் ஆணையம் பிரதமர் மோடிக்கு சாதகமாக செயல்படுகிறது. இதே போன்றுதான் 2017-ல் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் தேதி அறிவிப்பில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருந்தது என அகமது படேல் குற்றம் சாட்டியுள்ளார்.

More News >>