திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி, வைகோவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், வைகோவுக்கு ராஜ்யசபா சீட் ஒன்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச் செயலாலர் வைகோ பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ராஜ்யசபாவில் ஒரு இடமும் என உடன்பாடு ஏற்பட்டது. ஒரு ராஜ்யசபா சீட் வைகோவுக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு தொகுதியும், ராஜ்யசபாவில் ஒரு இடமும் திமுக கூட்டணியில் வழங்கப் பட்டுள்ளது. 21 சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை மதிமுக ஆதரிக்கும். ஒரு மக்களவைத் தொகுதியில் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து தற்போது அறிவிக்க இயலாது என்று வைகோ தெரிவித்தார்.