நடிகர் விஜய்யின் கார் ஓட்டுநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபலங்கள்
தன் கார் ஓட்டுநரின் வீட்டு திருமணத்தில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத அந்தப் படத்தை ‘தளபதி 63’ என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா இணைந்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதனால் இத்திரைப்படம் மீதான விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதனிடையே திருமண விழாவில் விஜய் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யின் கார் ஓட்டுநர் ராஜேந்திரன் மகளின் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குத் தன் மனைவி சங்கீதாவுடன் விஜய் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்நிகழ்வில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் மட்டுமின்றி கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, அட்லீ உள்ளிட்ட பிரபலங்களும் இந்தத் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு ராஜேந்திரனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துனர்.