நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஓட்ஸ் புட்டு ரெசிபி

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடிய ஓட்ஸ் புட்டு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - ஒரு கப்

நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

முந்திரித் துண்டுகள் - சிறிதளவு

தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் ஓட்ஸ்ஸை போட்டுச் சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.

அத்துடன், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து மேலும் இரண்டு ஓட்டு ஓட்டவும்.

பின்னர், நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்து அதன் மேல் தூவவும்.

அவ்ளோதாங்க.. சுவையான ஓட்ஸ் புட்டு ரெடி..!

More News >>