மீண்டும் இணையும் சிம்பு - ஹன்சிகா! - எகிறும் எதிர்பார்ப்பு

ஹன்சிகா நடித்து வரும் கதாநாயகி மையமான ‘மஹா’ படத்தில் நடிக்க தேதிகளை ஒதிக்கியுள்ளார் நடிகர் சிம்பு.

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த ஹன்சிகா, தமிழில் அறிமுகமான படம் மாப்பிள்ளை. தனுஷூக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவருக்கு விஜய், சூர்யா, கார்த்தி என பல முன்னணி  நடிகர்களுடன் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் குழந்தை நட்சத்திரம் முதல் இதுவரை 49 படங்களில் நடித்துவிட்ட ஹன்சிகாவுக்கும், ஐம்பதாவது படம் தான் இந்த ‘மஹா’. லக்‌ஷ்மண்  இயக்கிய 'ரோமியோ ஜூலியட்', 'போகன்' படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜமீல் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். காவி உடையில் ஹன்சிகா புகைபிடிப்பது போன்ற இந்த படத்தின் போஸ்டர்  வெளியாகி எதிர்ப்பையும் பரபரப்பையும் சமீபத்தில் கிளப்பியது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க ஏழு நாள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் சிம்பு. ஓவியா நடிப்பில் சமீபத்தில் வெளியான 90ML படத்தின்  க்ளைமேக்ஸ் காட்சியில் வந்து சென்றது போல, இந்த படத்திலும் சில காட்சிகள் மற்றும் ஒரு பாடலில் ஹன்சிகாவுடன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஓவியா நடித்த 90ML படமும் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியது. ஹன்சிகாவின் மஹா வெளியாவதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கியது. இப்படி சர்ச்சையான படங்கள் என்றாலே துணிந்து தலை  கொடுப்பவர் சிம்பு தான் என்று கோலிவுட் வட்டாரங்கள் பேசிக்கொள்கிறது. தவிர, ஏற்கெனவே சிம்புவும், ஹன்சிகாவும் விஜய்சந்தர் இயக்கத்தில் வெளியான வாலு படத்தில் ஒன்றாக நடித்தவர்கள். மேலும்  சிம்புவும் ஹன்சிகாவும் ஒருகாலத்தில் காதலித்து இருவரும் பிரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News >>