பாகிஸ்தானின் பாலகோட்டில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை குறித்த சர்ச்சை - கொசுக் கதை கூறிய மத்திய அமைச்சர்

தூக்கத்தில் இருக்கும் போது கடிக்கிற கொசுக்களை மருந்தடித்து கொல்வது தான் வேலையே தவிர எத்தனை கொசுக்கள் செத்தது என்றா எண்ணிப் பார்ப்போம் என்று பாலகோட்டில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 26-ந்தேதி இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஜெய்ஸ் இ முகம்மது இயக்கத் தீவிரவாதிகளின் முகாம்களை குண்டு வீசி அழித்தது. பாகிஸ்தாளின் பாலகோட் முகாமில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த எண்ணிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றன.

ஆளே இல்லாத இடத்தில் குண்டு வீசி, வெறும் மரங்களை மட்டும் சாய்த்து விட்டு பொய்யான தகவலைப் பரப்புவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கொல்லப் பட்ட தீவிரவாதிகள் எத்தனை பேர் என்பதை ராணுவத் தரப்பில் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், மே.வங்க முதல்வர் மம் தா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் சந்தேகம் எழுப்பினர். விமானப் படை தரப்பிலோ, தாக்குதல் நடத்துவது மட்டுமே எங்கள் வேலை. செத்தது எத்தனை பேர் என்று கணக்கு சொல்ல வேண்டியது அரசாங்கம் தான் என்று கூறிவிட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கோ, தாக்குதல் நடத்தப்பட்ட பாலகோட் பகுதியில் 300 செல்போன்கள் உபயோகத்தில் இருந்ததாக மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைப்பு தகவல் கொடுத்தது. அப்படியெனில் செல்போன் பயன்படுத்தியது மரங்களா? என்று கேள்வி எழுப்பினார். சந்தேகம் இருந்தால் பாகிஸ்தான் என்று கொல்லப்பட்டவர்களின் பிணங்களை எண்ணிப் பார்த்து வாருங்கள் என்று காட்டமாக ராஜ் நாத் சிங் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மற்றொரு மத்திய அமைச்சரும், ராணுவ ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான ஜெனரல் வி.கே.சிங், பாலகோட் சம்பவத்தை கொசுக்கதை ஒன்றைக் கூறி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நள்ளிரவு 3.30 மணிக்கு நல்ல தூக்கத்தில் இருக்கும் போது கொசுக் கடித்தால் 'ஹிட்' (கொசு மருந்து) அடித்து கொசுக்களை கொல்வோம். அதன் பிறகு எத்தனை கொசுக்கள் செத்தது, எத்தனை மயங்கியது என்று எண்ணிப் பார்த்துக் கொண்டா இருக்க முடியும் என்று பதிவிட்டு எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்

More News >>