ராஜினாமா செய்த கர்நாடக காங் எம்எல்ஏ - பிரதமர் மோடி பிரச்சார மேடையில் பாஜகவில் இணைந்தார்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ உமேஷ் ஜாதவ் பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார பொதுக் கூட்ட மேடையில் பாஜகவில் இணைந்தார்.
கர்நாடகாவின் சின்கோலி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான உமேஷ் ஜாதவ், இரு தினங்களுக்கு முன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரசில் அதிருப்தியில் இருந்த ஜாதவ் கட்சியை விட்டும் விலகினார்.
இன்று கர்நாடக மாநிலம் கல்புர்கியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். மோடி வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன் மேடையில் தோன்றிய உமேஷ் ஜாதவ், கர்காடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஜாதவ், வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வை எதிர்த்து குல்பர்காவில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.