அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் - ஜி.கே.வாசனுக்கு ஒரு தொகுதி உறுதி
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைவது உறுதியாகி உள்ளது. அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சென்னை வண்டலூரில் மாலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்ட மேடையில் அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடு பட்டியலை இறுதி செய்ய அதிமுக முனைப்பு காட்டி வருகிறது.
தேமுதிகவும் , தமிழ் மாநில காங்கிரசும் கூட்டணியில் இணைவது தான் கடைசி வரை இழுபறியாக நீடித்தது. இந்நிலையில் பிற்பகலில் பொதுக் கூட்ட மேடையில் கூட்டணித் தலைவர்கள் பட வரிசையில் விஜயகாந்த் படத்துடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் படமும் திடீரென இடம் பெற்றது. இதனால் ஜி.கே.வாசனும் இன்றைய பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதுடன், கூட்டணியில் அவருக்கும் ஒரு தொகுதி உறுதி என தகவல் வெளியாகி உள்ளது.